நீட் தேர்வுக்கு எதிராக கருத்துக் கூறவே தைரியம் இல்லாத அதிமுக, முல்லை பெரியாறு தொடர்பாக போராட்டம் நடத்துவது வேடிக்கையானது: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்க தைரியம் இல்லாத அதிமுக, முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் போராட்டம் நடத்துவதாக அறிவிப்பதா என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். முல்லை பெரியாறு அணையின் உண்மை நிலை குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நேரில் ஆய்வு செய்கிறார். இதற்காக விமானத்தில் மதுரை செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுத்திருப்பதால் அனைத்து அணைகள், அணைக்கட்டுகளிலும் நேரில் ஆய்வு செய்யப்பட உள்ளதாக கூறினார்.

முல்லை பெரியாறு அணைக்கு நேரில் சென்று ஆய்வு செய்யாமல், அணையின் நிலவரம் தெரியாமல் அதிமுக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது வேடிக்கையாக உள்ளது என்றும் அமைச்சர் கூறினார். மதுரையில் இருந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் தேக்கடை செல்லும் அமைச்சர் துரைமுருகன், படகில் முல்லை பெரியாறு அணை பகுதிக்கு செல்கிறார். இன்றும், நாளையும் தேக்கடையிலேயே தங்கி அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் நாளை மாலை மீண்டும் சென்னை திரும்புகிறார்.

Related Stories:

More