தோற்கடித்தால்தான் நடக்கும் போல அஞ்சு, பத்து எல்லாம் வேலைக்கு ஆகாது பெட்ரோல் விலையை 50 ரூபாயாவது குறைங்க...-சிவசேனா எம்பி சஞ்சய் ராவுத் கோரிக்கை

மும்பை : எரிபொருள் விலை ₹5 அல்லது ₹10 என்று குறைப்பது எல்லாம் வேலைக்கு ஆகாது. குறைந்தது 50 ரூபாயாவது குறைக்க வேண்டும் என்று சிவசேனா எம்பி சஞ்சய் ராவுத் எம்பி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.பெட்ரோல் விலை நாடு முழுவதும் தற்போது ₹100க்கும் அதிகம் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒன்றிய அரசு பெட்ரோலுக்கான கலால் லிட்டர் ரூ.5 குறைத்தும், டீசலுக்கான வரியை ரூ.10ம் குறைத்து அறிவித்தது. இடைத்தேர்தல் நடைபெற்ற பாஜ ஆளும் சில மாநிலங்களில் அந்த கட்சி  தோல்வியை சந்தித்ததை அடுத்து இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பெட்ரோல் விலையை குறைத்ததற்கு ஒன்றிய அரசை  குற்றம்சாட்டி சிவசேனா மாநிலங்களவை எம்பி சஞ்சய் ராவுத் நேற்று பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

ஒன்றிய அரசு பெட்ரோல் விலையை ₹5 குறைத்து அறிவித்தது சேவை  நோக்கத்துக்காக அல்ல. இந்த விலையை ₹25 அல்லது ₹50 வது குறைக்க வேண்டும். எனவே பெட்ரோல் விலையை ₹50 குறைக்க வேண்டும் என்றால் பாஜ முழுமையாக தோற்கடிக்கப்பட வேண்டும். பொதுமக்கள் தீபாவளியை கடன் வாங்கித்தான் கொண்டாடுகிறார்கள். பண வீக்கம் காரணமாக பண்டிகையை கொண்டாடும் மனநிலையில் மக்கள் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: