உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள புனித தலமான கேதார்நாத்தில் பிரதமர் மோடி வழிபாடு.: பல்வேறு நலத்திட்ட கட்டுமான பணிகள் ஆய்வு

உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள புனித தலமான கேதார்நாத்தில் பிரதமர் மோடி வழிபாடு செய்துள்ளார். கேதார்நாத்தில் சாமி தரிசனம் செய்த பிரதமர் பல்வேறு நலத்திட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்கிறார்.

* ஆதி சங்கரரின் 12 அடி உயரமுள்ள உருவ சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

* ஆதி சங்கரரின் சமாதியில் புதிதாக கட்டப்பட்ட நினைவிடத்தையும் திறந்து வைத்தார் பிரதமர் மோடி

* கேதார்நாத் கோயில் அருகே 12 அடி உயரத்தில் 35 டன் எடையும் கொண்ட ஆதி சங்கரரின் கற்சிலை நிறுவப்பட்டுள்ளது.

* மழை, வெயில் மற்றும் கடுமையான காலநிலையை தாங்கும் வகையில் குளோரைட் ஸ்கிஸ்ட் பாறையால் சிலை வடிவமைப்பு

* ஆதி சங்கரரின் சிலையை உருவாக்க 120 டன் கல் கொண்டு வரப்பட்டு 2020 செப்.-ல் சிலை செதுக்கும் பணி தொடங்கியது.

* 2013-ல் ஏற்பட்ட மேக வெடிப்பு பெருவெள்ளத்தால் கோயில் சேதமடைந்து, ஆதி சங்கரரின் சிலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

* கேதார்நாத் கோயில் மற்றும் சமாதியை புனரமைக்கும் பணி 500 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது.

Related Stories: