அண்ணாமலையார் கோயிலில் சுவாமி வீதி உலா வரும் வாகனங்கள் சீரமைப்பு பணி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு சுவாமி வீதி உலா வரும் வாகனங்கள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம் 19ம் தேதி அதிகாலை 4 மணிக்கும் அன்று மாலை 6 மணிக்கு கோயிலுக்கு பின்புறம் 2,668 அடி  உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்படுகிறது.  

இந்நிலையில், தீபத்திருவிழாவையொட்டி 10 நாட்கள் மாட வீதியில் சுவாமி வீதி உலா வரும் வாகனங்கள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக தீபத்திருவிழா எளிமையான முறையில் நடைபெற்றது. இந்நிலையில், இந்த ஆண்டு தீபத்திருவிழா கட்டுப்பாடுகள் குறித்து அறிவிக்கப்படாததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Related Stories:

More