மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சோதனை ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் புகார்: ஏஎஸ்பி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி

சென்னை: ஆம்னி பேருந்துகளில் அதிகளவில் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தது. இதனை அடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவின் பேரில் செங்கல்பட்டு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆம்னி பேருந்துகளில் சோதனை நடத்தினர். இதில்,பரனூர் சுங்கச்சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆனந்தன், முரளி ஆகியோர் ஆம்னி பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா, ஆம்னி பேருந்துகளின் ஆவணங்கள் சரியாக உள்ளதா என சோதனையிட்டனர். மேலும், அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர். சென்னையிலிருந்து அதிக அளவில் வாகனங்கள் தென்மாவட்டங்களை நோக்கி  செல்வதால் பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்களை கண்காணித்து அனுப்ப செங்கல்பட்டு ஏஎஸ்பி ஆசிஸ் பச்சோரா தலைமையில் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: