பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் மக்கள் வீதிக்கு வந்து ஆட்சியை எதிர்த்து போராடுவார்கள்: ஒன்றிய அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி எச்சரிக்கை

சென்னை: பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் மக்கள் வீதிக்கு வந்து ஆட்சியை எதிர்த்து போராடுவார்கள் என்று ஒன்றிய அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டம் 2 நாட்கள் நடந்தது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டம் சென்னையில் 2 நாட்கள் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.பைஸி தலைமை தாங்கினார். அகில இந்திய துணைத் தலைவர்கள் தெகலான் பாகவி, வழக்கறிஞர் ஷர்புதீன் அஹமது, நாஸ்னி பேகம், பொதுச்செயலாளர்கள் அப்துல் மஜீத், இலியாஸ் தும்பே, முகமது ஷஃபி, செயலாளர்கள் டாக்டர் தஸ்லீம் ரெஹ்மானி, சீதாராம் கொய்வால், டாக்டர் மஹ்மூத் ஆவாத் ஷெரீப், யாஸ்மின் ஃபரூக்கி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தமிழக தலைவர் நெல்லை முபாரக், துணைத் தலைவர் அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் மற்றும் கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, மேற்குவங்கம், பீகார், டெல்லி, உ.பி., குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செயற்குழு கூட்டத்தில், இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு எண்ணெய் விலையை நிர்ணயம் செய்ய அரசாங்கம் வழங்கிய சுதந்திரம் மற்றும் மத்திய-மாநில அரசுகள் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது விதிக்கும் அதிக அளவு வரிகள் ஆகியவையே ஜெட் வேகத்தில் உயரும் விலைவாசி உயர்வுக்கு காரணம். விலைவாசியை உடனடியாக குறைக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மக்கள் வீதிக்கு வந்து ஆட்சியின் கொடுங்கோன்மையை எதிர்த்து போராடுவார்கள் என எஸ்.டி.பி.ஐ. கட்சி எச்சரிக்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: