ஸ்ரீநகர் - ஷார்ஜா இடையே இயக்கப்படும் இந்திய விமானத்துக்கு பாகிஸ்தான் திடீர் தடை

ஸ்ரீநகர்: காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர்-ஷார்ஜா இடையே நேரடி பயணிகள் விமானத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த விமானம் பாகிஸ்தான் நாட்டு வான்வெளி வழியாக ஷார்ஜா சென்றடையும். விமானம் 23, 24, 26, 28ம் தேதிகளில் பாகிஸ்தான் வான்வெளி வழியாக இயக்கப்பட்டது. இந்நிலையில், ஷார்ஜா விமானம் தங்கள் வான்வெளி வழியாக பறக்கக் கூடாது என பாகிஸ்தான் அரசு திடீரென அனுமதி மறுத்துள்ளது. இந்த முடிவை வெளியுறவு அமைச்சகம், ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளது. இதனால் இனி ஶ்ரீநகரிலிருந்து புறப்படும் விமானம் உதய்பூர், அகமதாபாத் சென்று ஓமன் நாட்டு வான்வெளி வழியாக சுற்றிக் கொண்டு ஷார்ஜா செல்ல வேண்டும். பாகிஸ்தான் அரசு, சர்வதேச விதிமுறையையும் மீறுவதாக ஒன்றிய அரசின் மூத்த அதிகாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Related Stories: