×

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பனை கவுரவித்தது எல்ஐசி

சென்னை: பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மாரியப்பன், எல்ஐசி சார்பில் கவுரவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து எல்ஐசி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020-ல் இந்திய ஹாக்கி அணி தலைவரும், கோல் கீப்பருமான பி.ஆர்.ஸ்ரீஜேஷ் வெண்கலப் பதக்கம் வென்றார். இவரை எல்ஐசி சமீபத்தில் கவுரவித்தது. இதுபோல், சேலம் மாவட்டத்தை சேர்ந்த தங்கவேலு மாரியப்பன், டோக்கியோ பாராலிம்பிக்ஸ் 2020 போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர், 2016ல் ரியோ பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவர்.

இதைத்தொடர்ந்து, சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் எல்ஐசி-யின் தென்மண்டல மேலாளர் கே.கதிரேசன் முன்னிலையில், சேலம் கோட்ட அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாரியப்பனை எல்ஐசி சேலம் கோட்ட முதுநிலை மேலாளர் சுதாகர் பாபு கவுரவித்தார். மாரியப்பனின் சாதனைகளை தென்மண்டல மேலாளர் கே.கதிரேசன் பாராட்டினார். தன்னை கவுரவித்ததற்காக, எல்ஐசிக்கு நன்றி கூறிய மாரியப்பன், அனைத்து தரப்பினருக்குமான பாலிசிக்களை வைத்திருப்பதாக கூறினார். தானும், இந்த நிறுவனத்தின் 4 பாலிசிக்களை வைத்திருப்பது பெருமைக்குரியதாக உள்ளது எனவும் கூறினார். இவ்வாறு எல்ஐசி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : LIC ,Mariappan , LIC honors Paralympic medalist Mariappan
× RELATED அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. செய்த ...