×

திருப்போரூரில் நீதிமன்றம் அமைக்க வேண்டும்: மா.கம்யூ மாநாட்டில் தீர்மானம்

திருப்போரூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்போரூர் ஒன்றிய மாநாடு நேற்று முன்தினம் திருப்போரூரில் நடைபெற்றது. கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் லிங்கன் தலைமை தாங்கினார். மூத்த நிர்வாகி மனோகரன் மாநாட்டு கொடியை ஏற்றினார். மா.கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் இ.சங்கர் மாநாட்டு தொடக்க உரையாற்றினார். முன்னதாக ஒன்றியக்குழு உறுப்பினர் வெங்கடேசன் வரவேற்றார். வேலைத்திட்ட அறிக்கையை ஒன்றிய செயலாளர் செல்வம் வாசித்தார்.  

மாநாட்டில் திருப்போரூர் ஒன்றிய செயலாளராக செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர்களாக லிங்கன், வெங்கடேசன், நந்தகுமார், பொன்னப்பன், விக்னேஷ், உத்தரகுமார், உமா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த மாநாட்டில் கோயில் நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும், திருப்போரூரில் நீதிமன்றம், போக்குவரத்து அலுவலகம், தீயணைப்பு அலுவலகம் ஆகியவற்றை தொடங்க வேண்டும், திருப்போரூர் பேரூராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தை தொடங்க வேண்டும், திருப்போரூர் பேரூராட்சியில் நடைபெறும் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகளை விரைந்து முடித்திட வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு தடுத்து நிறுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Tirumpur , Court to be set up at Thiruporur: Resolution at the Maoist Conference
× RELATED திருப்பூரில் மாணவர்களுக்கு கெட்டுபோன...