×

தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை காரிடார் இயக்குனராக நியமனம்

சென்னை: தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை காரிடார் இயக்குனராக பா.கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், (இந்திய ஆயுத தொழிற்சாலை சேவை) தமிழக அரசின் கூடுதல் செயலாளருக்கு இணையான தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை காரிடார்-ல் திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், 2002ம் ஆண்டு குடிமையியல் பணியில் தேர்ச்சி பெற்று இந்திய ஆயுத தொழிற்சாலை சேவைகளுக்கு பணிநியமனம் பெற்றவர். பாதுகாப்பு உற்பத்தியில் புதுமை மற்றும் மேன்மைக்கான முன்மாதிரியான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ஆயுத தொழிற்சாலை வாரியம் 2020ம் ஆண்டிற்கான ஆயுத் பூஷண் விருது வழங்கி சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu ,Defense Industry Corridor , Appointed as Director, Tamil Nadu Defense Industry Corridor
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...