கோயம்பேடு தள்ளுவண்டி கடைகளில் பெண் அதிகாரி பணம் வசூலிப்பதாக குறுஞ்செய்தி: மர்ம நபருக்கு சைபர் க்ரைம் போலீசார் வலை

அண்ணா நகர்: கோயம்பேடு முதன்மை நிர்வாக அலுவலராக உள்ளவர் சாந்தி. இவர் நேற்றுமுன்தினம்  மாலை கோயம்பேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: கோயம்பேடு மார்க்கெட்டில் முதன்மை நிர்வாக அலுவலராக உள்ளேன். கோயம்பேடு மார்க்கெட் அருகே சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் இருக்க கூடாது என்று வியாபாரிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளேன். இதை தவறாக புரிந்து கொண்ட மர்ம நபர் ஒருவர் என்னை பற்றி தவறாக சமூக தலைவளைகங்களில் தள்ளுவண்டி கடைகளில் ரூ.500 வசூலிப்பதாக குறுஞ்செய்தி பரப்பி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்கு பதிந்து பெண் அதிகாரி பற்றி அவதூறு பரப்பும் நபரை கண்டுபிடிக்க அண்ணா நகர் சைபர் க்ரைம் போலீசாரிடம் வழக்கை  ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து, போலீசார் இது போன்ற குறுந்தகவலை தரப்பிய மர்ம நபரை விசாரணை செய்து தேடி வருகின்றனர்.

Related Stories:

More