இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் நியமனம்..!!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரவிசாஸ்திரியின் பதவிக்காலம் வரும் டி20 உலகக் கோப்பை போட்டியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணி உடனான தொடரில் இருந்து டிராவிட் பயிற்சியாளராக  செயல்படுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ராகுல் டிராவிட்டின் பங்களிப்பு மூலம் இந்திய அணி பல உயரங்களை அடையும் என நம்புவதாக பிசிசிஐ தலைவர்  கங்குலி தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான வீரர்களில் ஒருவர் ராகுல் டிராவிட். இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளிலும் டிராவிட்க்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வருகிறார்.

ஏற்கனவே டிராவிட் 19 வயதுக்குட்பட்ட மற்றும் இந்திய ஏ அணிக்கு பயிற்சியாளராக இருந்தபோது ரிஷப் பந்த், ஷுப்மன் கில், ஆவேஷ் கான், பிரித்வி ஷா, ஹனுமா விஹாரி போன்ற இளம் வீரர்கள் வளர்த்தெடுக்கப்பட்டனர்.

Related Stories:

More