×

ரொம்ப பிரபலமாக இருப்பதால்... நீங்க எங்க கட்சியில் சேர்ந்திடுங்களேன்! : மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அழைப்பு

புதுடெல்லி :‘இஸ்ரேல் மக்கள் உங்களை மிகவும் பிரபலமான மனிதராக பார்க்கின்றனர். அதனால்,  நீங்கள் எங்களது கட்சியில் சேர்ந்துவிடுங்கள்’ என்று பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அழைப்புவிடுத்தார். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற சிஓபி-26 காலநிலை உச்சிமாநாட்டின் போது, இஸ்ரேல் பிரதமர் நாஃப்தாலி பென்னெட்டும், இந்திய பிரதமர் மோடியும் சந்தித்துக் கொண்டனர். இருதலைவர்களும் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடினர். இவர்கள் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், இஸ்ரேல் பிரதமர்  நாஃப்தாலி பென்னெட், பிரதமர் மோடியிடம் ‘இஸ்ரேல் மக்கள் உங்களை மிகவும் பிரபலமான மனிதராக பார்க்கின்றனர்.

அதனால், நீங்கள் எங்களது கட்சியில் சேர்ந்துவிடுங்கள்’ என்று நகைச்சுவையாக கூறினார். அவரது பாராட்டை ரசித்து கேட்ட மோடி, அவரது தோளில் கையைப் போட்டு சிரித்தார். கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் பிரதமராக பென்னெட் பதவியேற்ற பின்னர், இரு தலைவர்களும் முதல் முறையாக தற்போதுதான் சந்தித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘பிரதமர் மோடி கிளாஸ்கோவில் இஸ்ரேல் பிரதமரை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகள் குறித்து பேசினர். உயர் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விவாதித்தனர்’ என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags : Israel ,Modi , இஸ்ரேல்
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...