×

கொரோனா குறித்து விழிப்புணர்வு: ராணுவ வீரர், 2,800 கிமீ நடைபயணம்: விராலிமலை வந்தார்

விராலிமலை: பொதுமக்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 197 நாடுகளின் தேசியக் கொடியை சைக்கிளில் கட்டி 2,800 கிலோ மீட்டர் நடை பயணம் மேற்கொண்டுள்ள ராணுவ வீரர் நேற்று விராலிமலை வந்தடைந்தார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சோமநாதபுரத்தை சேர்ந்தவர் ராணுவ வீரர் பாலமுருகன் (33). இவர் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 197 நாடுகளின் தேசிய கொடியை சைக்கிளில் கட்டி கொண்டு கைகளால் இழுத்தவாறு ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் இருந்து அயோத்தி வரை 2,800 கிலோ மீட்டர் நடை பயணம் மேற்கொள்கிறார். கடந்த அக்டோபர் 16ம் தேதி பயணத்தை தொடங்கிய இவர், நேற்று புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வந்தடைந்தார்.

மணிப்பூர் மாநிலத்தில் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் பாலமுருகன் கூறுகையில், கொரோனாவால் உயிரிழந்த அனைத்து நாட்டு மக்களை நினைவுகூறும் நோக்கத்தில் அணையா விளக்கு ஏற்றி இந்த பயணம் தொடர்வதாகவும், மனித இனத்தை காக்க 2 டோஸ் கொரோனா தடுப்பூசி அவசியம் செலுத்தி கொள்ள வேண்டும்’ என்றார்.


Tags : Viralimai , Corona, Awareness, Soldier, Hiking
× RELATED விராலிமலை சட்டமன்ற தொகுதியில் 3 பேருக்கு நல்லாசிரியர் விருது அறிவிப்பு