சாலைகளில் ஏற்படும் பள்ளம் மற்றும் குழிகளை உடனே சரி செய்ய சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் ஏற்படும் பள்ளம் மற்றும் குழிகளை உடனே சரி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சாலை பராமரிப்புக்கு மண்டல வாரியாக தலா ரூ.10 லட்சம் என 15 மண்டலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், 942 சாலைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கள ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சாலைகளில் பள்ளம், குழிகள், மழை நீர் தேங்கியிருந்தால் 1913 அல்லது 044-2561 9206 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More