×

மதுராந்தகம் ஏரிக்கரையில் 2,000 பனைவிதை விதைப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரிக்கரையில் 2 ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டது. மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சி சார்பில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள விவசாய பாசன ஏரிக்கரைகளில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் மா.கேசவன் தலைமை வகித்தார். பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு ஏரிக்கரையின் முக்கிய பகுதிகளிலும் மரங்கள் இன்றி காணப்பட்ட  கரை பகுதிகளிலும் 2 ஆயிரம் பனை மரக்கன்றுகளை நட்டனர்.

கடந்தாண்டு பேரூராட்சிக்கு உட்பட்ட மற்றொரு ஏரியின் கரைகளில் நடப்பட்ட சுமார் 1000 பனை விதைகளில் 800க்கும் மேற்பட்டவை முளைத்து வளர்ந்துவருகிறது. வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள புளியம்பாக்கம் கிராமத்தில் நேற்று தன்னார்வ அமைப்பின் சார்பில் முதல்கட்டமாக, பாலாற்றின் கரையோரத்தில் 10 ஆயிரம் பனைவிதைகளை 100-க்கும் மேற்பட்ட கிராம இளைஞர்கள், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் நடவு செய்தனர்.

Tags : Madurandam lake , Madhuranthakam, palm seed
× RELATED மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து...