குளித்தலை அடுத்த ஆதி நத்தம் சாலையில் சாய்ந்து நிற்கும் தென்னை மரங்களால் விபத்து அபாயம்

குளித்தலை : கரூர் மாவட்டம் மருதூர் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட ஆதி நத்தம் கிராமம் பகுதி உள்ளது. இப்பகுதி சாலை பெட்டவாய்த்தலையில் இருந்து கணேசபுரம் செல்லும் வழியில் உள்ளது. இவ்வழியாக தினந்தோறும் விவசாய தொழிலாளர்கள், இயந்திர வாகனங்கள், மாட்டு வண்டிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகமாக சென்று வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், வெளியூர்களுக்கு வேலைக்கு செல்வோரும் இவ்வழியாக இருசக்கர வாகனத்தில், சைக்கிளிலோ சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில் ஆதி நத்தம் அரசு பள்ளி அருகே சாலையோரம் மூன்று தென்னை மரங்கள் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையின் குறுக்கே சாய்ந்து நிற்கின்றன. தற்போது மழைக்காலம் என்பதால் மரத்தின் அடிப்பகுதி மழையினால் ஊறி எந்நேரமும் சாய்ந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை இருந்து வருகிறது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து தனி கவனம் செலுத்தி ஏதாவது விபத்துகள் ஏற்படும் முன் மூன்று தென்னை மரங்களையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: