தீபாவளியையொட்டி நகராட்சி சந்தையில் ரூ.1.80 கோடிக்கு மாடு விற்பனை

பொள்ளாச்சி : தீபாவளியையொட்டி பொள்ளாச்சி நகராட்சி சந்தையில் நேற்று ரூ.1.80 கோடிக்கு மாடு வியாபாரம் நடந்தது.பொள்ளாச்சி நகராட்சி மாட்டு சந்தை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளின் நடைபெறுகிறது. வெளி மாவட்டம், வெளி  மாநிலங்களிலிருந்தும், விற்பனைக்காக மாடுகள் கொண்டு வரப்படுகிறது. நேற்று நடந்த சந்தைநாளின்போது நாளை 4ம் தேதி தீபாவளி பண்டிகையை எதிர்நோக்கி, உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து விற்பனைக்காக சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டு வரப்பட்டன. மாடுகளை வாங்க மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள், மழையும் பொருட்படுத்தாமல் வந்திருந்தனர்.

மாடு வரத்து அதிகமாக இருந்தால் கூடுதல் விலைக்கு விற்பனையானது.   இதில் பசுமாடு ரூ.34 ஆயிரம் வரையிலும், நாட்டு காளை மாடு  ரூ.38 ஆயிரத்துக்கும், ஆந்திரா காளை மாடு  ரூ.42 ஆயிரத்துக்கும், எருமை மாடு ரூ.32 ஆயிரத்துக்கும், கன்றுக்குட்டி ரூ.15 ஆயிரம் வரையிலும் என, கடந்த வாரத்தைவிட ரூ.4500 வரையிலும் என கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், கடந்த வாரம் ரூ.1.40 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. ஆனால் இந்த வாரத்தில் ரூ.1.80 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: