ராமநாதபுரத்தில் கனமழை வீடு இடிந்து மூதாட்டி பலி

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பெய்த கனமழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக லேசாகவும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 7 மணிக்கு மேல் சுமார் 3 மணிநேரம் ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்ய துவங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதியடைந்தனர்.

கனமழைக்கு, ராமநாதபுரம் தெற்கு முனியசாமி கோயில் தெருவை சேர்ந்த அங்குசாமி ஓட்டு வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி அங்குசாமியின் மனைவி ரெத்தினம்மாள் (75) பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மழைக்கு சுவர் இடிந்து மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: