துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் தொடர் மழையால் வெங்காயவேலூர் ஏரி நிரம்பியது-துணை சபாநாயகர் ஆய்வு

திருவண்ணாமலை : துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் தொடர் மழையினால் வெங்காயவேலூர் ஏரி நிரம்பியுள்ளதால் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆய்வு செய்தார்.திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம் இனாம்காரியந்தல் ஊராட்சிக்குட்பட்ட வெங்காயவேலூர் ஏரி கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் நிரம்பியுள்ளது. இந்நிலையில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ேநற்று ஏரியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, ஏரி முழுவதும் நிரம்பியுள்ளதால் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், உபரி நீர் வெளியே செல்லும் கால்வாய்கள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆய்வின்போது, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: