பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் ஐதராபாத் பண்ணை வீட்டில் சூதாடிய 24 பேர் கைது-22 கார்கள், ₹24 லட்சம் பறிமுதல்

திருமலை : பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் ஐதராபாத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 24 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 22 கார்கள், ₹24 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். தெலங்கானா மாநிலம், ஐதராபாத் நர்சிங்கி பகுதியை சேர்ந்தவர் சுமன் சவுத்ரி. இவரது பண்ணை வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் கடந்த 3 நாட்களாக சூதாட்டம் நடந்து வந்துள்ளது.

இதுகுறித்து, நர்சிங்கி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் பண்ணை வீட்டில் திடீரென சோதனையிட்டனர். அப்போது, பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஐதராபாத், கடப்பா, கர்னூல் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் வியாபாரிகள், தொழிலதிபர்கள், சுமன் சவுத்ரி உட்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 22 கார்கள், ₹24 லட்சம் ரொக்கம் மற்றும் செல்போன்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் ஐதராபாத்தில் ெபரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: