திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் பிரபுதேவா சுவாமி தரிசனம்

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் பிரபுதேவா சுவாமி தரிசனம் செய்தார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நடிகை, நடிகர்களும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்களால் முடிந்த பணம் மற்றும் நகைகளை கோயிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீவாரி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை ஏழுமலையான் கோயிலில் நடிகர் பிரபுதேவா சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர்.

பின்னர், வேத பண்டிதர்கள் மூலம் ஆசிர்வாதம் செய்து, லட்டு உள்ளிட்ட தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். மேலும், நினைவு பரிசாக சுவாமி புகைப்படம் வழங்கினர்.

முன்னதாக, கோயில் நுழைவுவாயிலில் உள்ள தங்க கொடி மரத்தை பிரபுதேவா தொட்டு வணங்கினர். அதேபோல், தெலுங்கு திரைப்பட நடிகர் கோபி சந்த் நேற்று ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கும் வேத பண்டிதர்கள் மூலம் ஆசிர்வாதம் செய்து, தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நடிகர்  கோபிசந்த் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் அதிகாரிகள்  சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்து, தீர்த்த பிரசாதங்கள் வழங்கி

னர்.

Related Stories: