டிச.8ல் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு... மாணவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே தேர்வு மையம் : அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நிச்சயம் நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, டிச.8ம் தேதி பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் தேர்வு நடைபெறும்; மாணவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே தேர்வு மையம் ஒதுக்கப்படும்.டிசம்பர் 8ல் இருந்து 12ம் தேதி வரை தொகுதி தொகுதியாக பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு நடைபெறும்.டிசம்பர் 8ல் 23,684 பேரும் 9ம் தேதி 21,299 பேரும், 10ம் தேதி 24,710 பேரும், 11ம் தேதி 32,190 பேரும், 12ம் தேதி 36,248 பேரும் தேர்வு எழுத உள்ளனர்.

தொழில்நுட்ப கல்விக்கான விரிவுரையாளர் தேர்வு 200க்கும் மேற்பட்ட மையங்களில் நடத்தப்படும். 1060 விரிவுரையாளர் பணிக்கு 1,38, 140 பேர் விண்ணப்பித்துள்ளனர். வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படும்.உச்ச நீதிமன்ற உத்தரவை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உச்சநீதிமன்ற உத்தரவை பொறுத்து இடஒதுக்கீட்டில் கல்லூரிகளில் இடம் கிடைத்தவர்களுக்கான நிலை தெரியவரும்,என்றார்.

Related Stories: