சித்தூர் அருகே 2 காரில் கடத்திய ₹10 லட்சம் கர்நாடக மதுபாட்டில்கள் பறிமுதல்-3 பேர் கைது

சித்தூர் : சித்தூர் மாவட்டம், செர்லோபள்ளி  கிராமம் அருகே சித்தூர்-திருப்பதி சாலையில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணய்யா மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை போலீசார் மடக்கினர். ேபாலீசாரை பார்த்ததும் காரில் இருந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். இதில், 2 பேரை போலீசார் பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிப்பட்ட நபர்களுடன் போலீசார் காரை சோதனையிட்டனர்.

அதில், கர்நாடக மாநில மதுபாட்டில்கள் இருந்தது. இதையடுத்து, போலீசார் பிடிப்பட்ட 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில், கர்நாடக மாநிலம், கோலார் தாலுகா, சின்கோனா அல்லி கிராமத்தை சேர்ந்த  மஞ்சுநாத்(26), கேஜிஎப் தாலுகா, கதிரிபுரம் கிராமத்தை சேர்ந்த சோமசேகர்(25) என்பது தெரிந்தது. மேலும், தப்பி ஓடியவர் குமார் என்பது ெதரிந்தது. தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும், ₹5 லட்சம் மதிப்பிலான கர்நாடக மாநில மதுபாட்டில்களுடன் காரை பறிமுதல் செய்தனர். அதேபோல் சித்தூர்-திருத்தணி சாலையில்  தாளம்பேடு பகுதியில் என்ஆர்பேட்டை ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலீப்குமார் மற்றும் போலீசார்  வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை போலீசார் நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் காரில் இருந்த 2 பேர் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓட முயன்றனர்.

இதில், ஒருவரை போலீசார் பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடி விட்டார். பிடிப்பட்ட நபருடன் காரை சோதனையிட்ட போது காரில் ₹5 லட்சம் மதிப்பிலான கர்நாடக மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிந்தது. பிடிப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் சித்தூர் மாவட்டம், சத்திய வேடு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் அண்ணா என்பது தெரிந்தது. தப்பி ஓடியவர் செக்ரி என்பதும் தெரிந்தது. தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிந்து ெவங்கடேஷ் அண்ணாவை கைது செய்தனர். மேலும், காருடன் ₹5 லட்சம் மதிப்பிலான கர்நாடக மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: