சென்னை கோயம்பேடு இந்தியன் வங்கி கிளை முன்னாள் மேலாளர் சேர்மதி ராஜா உள்பட 18 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: சென்னை கோயம்பேடு இந்தியன் வங்கி கிளை முன்னாள் மேலாளர் சேர்மதி ராஜா உள்பட 18 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சென்னை கோயம்பேடு இந்தியன் வங்கி கிளை முன்னாள் மேலாளர் சேர்மதி ராஜா உள்பட 18 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை துறைமுக அதிகாரிகள் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்தியன் வங்கியில் ரூ.100 கோடியை சென்னை துறைமுக பொறுப்புக்கழகம் டெபாசிட் செய்திருந்தது. துறைமுக ஊழியர்கள் சிலர் வங்கி மேலாளர் உதவியுடன் டெபாசிட் தொகையை வேறு கணக்குக்கு மாற்றி மோசடி செய்துள்ளனர். சென்னை துறைமுக பொறுப்புக்கழக பெயரில் போலி வங்கிக்கணக்கு தொடங்கி டெபாசிட் தொகையை மாற்றி உள்ளனர். வேறு கணக்குக்கு மாற்றப்பட்ட டெபாசிட் தொகையை முன்கூட்டியே வைப்புத்தொகை காலத்தை முடித்து பணம் பெற்றுள்ளனர். வங்கி மேலாளர், துறைமுக ஊழியர்கள் ஒத்துழைப்புடன் ரூ.45.50 கோடியை மோசடி செய்து எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை துறைமுகத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி வைப்புநிதியை கோயம்பேட்டில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த வைப்புநிதியை கணேஷ் நடராஜன் என்பவர் தான் துறைமுக பொறுப்பு அதிகாரி என ஆள் மாறாட்டம் செய்து அங்கிருக்கும் வங்கி மேலாளர் சேர்மதி ராஜா என்பவருடன் கூட்டு சேர்ந்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வைப்புநிதியை நடப்பு கணக்கில் 2 கணக்குகளாக மாற்றி அதனை மீண்டும் பல்வேறு கணக்குகளுக்கு மாற்றி 100 கோடி ரூபாயை கொள்ளையடிக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர். முதற்கட்டமாக 50 கோடியாக இரண்டு முறை நடப்பு கணக்குக்கு மாற்றப்பட்டு முதல் 50 கோடியை கொள்ளையடிக்கும் போதே வங்கி அதிகாரிகள் உஷாராகினர்.

இதனையடுத்து இந்தியன் வங்கி சென்னை துறைமுகத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது அதுபோன்று எந்தவித நடவடிக்கையிலும் மேற்கொள்ளவில்லை என தெரியவந்தது. சென்னை துறைமுகத்தின் 100 கோடி ரூபாயை கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தாலும் சென்னை துறைமுகம் தொடர்பாக இருக்கின்ற காரணத்தினால் உடனடியாக ஜூலை மாதம் அன்று சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக கொரோனா காலத்தில் விசாரணை தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டிருந்தது. செப்டம்பர் மாதம் திடீரென சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டது. சுமார் 30 இடங்களில் தமிழகம் முழுவதும் இந்த சோதனையை மேற்கொண்டு 12 பேரை கைது செய்திருந்தனர். குறிப்பாக வங்கி மேலாளர் சேர்மதி ராஜா, இவர்களுக்கு தரகர்களாக செயல்பட்டவர்கள், இவர்களுக்கு மூளையாக செயல்பட்ட 2 வெளிநாட்டவர்கள் என அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 6 பேர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டு மொத்தம் 18 பேர் மீது தற்போது சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை தொடர்ந்து சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெறும்.

Related Stories: