சென்னை: மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் சகோதரர் சிவராஜ்குமாரை சந்தித்து நடிகர் சிவகார்த்திகேயன் ஆறுதல் கூறினார். கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர் ராஜ்குமார். இவரது மகன்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் ஆகியோர் கன்னட சினிமாவில் ஸ்டார் நடிகர்கள். இந்நிலையில் கடந்த அக்டோபர் 29ம் தேதி மாரடைப்பால் புனித் ராஜ்குமார் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், நேற்று முன்தினம் பெங்களூர் சென்று சிவராஜ்குமாரை சந்தித்தார். புனித்தின் மரணத்துக்காக அவருக்கு ஆறுதல் கூறினார். இது குறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில், ‘புனித்தின் மரணம் அதிர்ச்சி தருகிறது. அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல, நல்ல மனிதராகவும் இருந்தார்’ என்றார்.