முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளரும், தலைமை நிலைய பரப்புரையாளருமான திருப்பூர் சு.சிவபாலன் தலைமையில், முன்னாள் செயலாளர்கள், பகுதி துணைச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள் மற்றும் வார்டு செயலாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். இதைத்தொடர்ந்து,  பாமகவை சேர்ந்த மாநில முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் சி.வடிவேல் மற்றும் அதிமுக, அமமுக  மாவட்ட நிர்வாகிகள் என 100க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

Related Stories: