தீபாவளியன்று ரயில்கள் இயக்கம் எப்படி?

சென்னை: தீபாவளி பண்டிகையன்று புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: நாளை (4ம் தேதி) தீபாவளிப் பண்டிகை தேசிய விடுமுறை என்பதால், அன்றைய நாளில் புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயங்கும். அதேபோல் முன்பதிவு மையங்களும் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: