துபாய் பயணத்துக்கு 2 முறை டெஸ்ட் எடுக்க மறுப்பு இலங்கையில் கொரோனா டெஸ்ட் எடுக்க பயணிகள் மறுப்பு : சென்னையில் பரபரப்பு

சென்னை:  சென்னையில் இருந்து கொழும்பு வழியாக துபாய் செல்லும் லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 10 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது.அப்போது,  துபாய் பயணிகளை ஏர்லைன்ஸ் ஊழியர்கள், விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை. மேலும், நீங்கள் சென்னையில் எடுத்துள்ள  கொரோனா டெஸ்ட் 6 மணி நேரத்துக்கு மட்டுமே செல்லும். இலங்கையில் கொரோனா டெஸ்ட் கட்டாயம் என தெரிவித்தனர்.

ஆனால் 42 பயணிகளும் இலங்கையில் 2வது டெஸ்ட் எடுக்க மறுப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து 42 பயணிகளின் பயணத்தை லங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் ரத்து செய்தனர். மற்ற 102 பயணிகளுடன் லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 10.40 மணிக்கு புறப்பட்டு சென்றது.இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட 42 பயணிகளும், லங்கன் ஏர்லைன்ஸ் கவுன்டரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து அதிகாரிகள் சமரசம் செய்து 42 பயணிகளையும் துபாய்க்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர்.

Related Stories: