×

நடுக்கடலில் தவித்த 9 மீனவர்கள் மீட்பு

சென்னை:  தண்டையார்பேட்டை சாந்தி காலனியை சேர்ந்த  பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான விசை படகில்,காசிமேடு நேதாஜி நகரை சேர்ந்த விசைப்படகு ஓட்டுநர் பிரபு, முனியப்பன், ஜெயராமன், மணி, குமார், தியாகு, தனசேகர், வடிவேல், நாகராஜ் உள்ளிட்ட 9 மீனவர்கள், கடந்த 26ம் தேதி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடந்த 30ம்தேதி ஆந்திர மாநிலம், நிஜாம் பட்டினம் அருகே மீன்பிடித்த போது, விசைப்படகில்  ஓட்டை விழுந்து, 3 நாளாக தண்ணீரில் தத்தளித்தனர்.

 தகவலின் பேரில், கடலோர காவல் படையினர் அவர்களை தேடி வந்தனர்.இந்நிலையில், அதே பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காசிமேடு பகுதியை சேர்ந்த மீனவர்கள், இவர்களை மீட்டு காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர், அவர்களுக்கு மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




Tags : Mediterranean , Stranded in the Mediterranean 9 fishermen rescued
× RELATED துருக்கியில் கேபிள் கார் விபத்து 23 மணி...