தொழிலதிபர் ராஜேஷ் கடத்தப்பட்ட வழக்கில் 6 போலீசார் சஸ்பெண்ட்

திருமங்கலம்: திருமங்கலத்தில் தொழிலதிபர் ராஜேஷ் கடத்தப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு வரும் கிரி, பாலா, ஷங்கர் உள்ளிட்ட 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு அயப்பக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகாரில் திருமங்கல காவல் உதவி ஆணையர் சிவகுமார், ஆய்வாளர் சரவணன் உட்பட 6 போலீசார் மற்றும் இந்து மகா சபா அமைப்பின் நிர்வாகி மற்றும் மேலும் சில தொழிலதிபர்கள் சேர்ந்து தன்னை கடத்தி தனது சொத்துக்களை அபகரிக்க முயன்றதாக அந்த புகாரில் குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து இந்த புகார் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக திருமங்கலத்தின் உதவி ஆணையராக இருந்த 6 போலீசார் உட்பட மொத்தம் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் 6 போலீசார் மீது குற்றம் நிரூபணமான நிலையில் 6 போலீசார்களை பணியிடை நீக்கம் செய்ய சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ள.  

Related Stories:

More