மீண்டும் களமிறங்கப்போகும் யுவராஜ் சிங்; ரசிகர்கள் உற்சாகம்

டெல்லி : அடுத்த ஆண்டு முதல் மீண்டும் கிரிக்கெட்டில் களமிறங்கவுள்ளதாக முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான யுவராஜ் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரசிகர்களின் விருப்பத்தின் பேரில் வரும் பிப்ரவரி முதல் மீண்டும் கிரிக்கெட் களம் காண விரும்புவதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

39 வயதான யுவராஜ் சிங் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 20 ஓவர் போட்டிகளில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து புகழ் பெட்ரா யுவராஜ் சிங் 2011-ம் ஆண்டில் ஒரு நாள் உலகக்கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதையும் வென்றிருந்தார். யுவராஜ் சிங் இந்த ஆண்டு அதிகம் பிரபலமாகாத சில சர்வதேச போட்டிகளில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.         

Related Stories:

More