×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளில் இதுவரை 1,40,080 பயணிகள் பயணம்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளில் இதுவரை 1,40,080 பயணிகள் பயணம் செய்துள்ளனர். போக்குவரத்து துறையின் சார்பில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் இன்று (02.11.2021) மதியம் 1 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,100 பேருந்துகளில் 1072 பேருந்துகளும், 166 சிறப்பு பேருந்துகளும் ஆக கடந்த 01.11.2021 முதல் 02.11.2021 இன்று மதியம் 1 மணி வரையில் மொத்தம் 3,726 பேருந்துகளில் 1,40,080 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும் இதுவரை 1,01,662 பயணிகள் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.

Tags : Deepavali festival , Deepavali festival, special bus
× RELATED நெருங்கும் தீபாவளி பண்டிகை: பட்டாசு உற்பத்தி பணிகள் சிவகாசியில் தீவிரம்