×

ஜெய் பீம் படத்தை பார்த்தேன்... கண்கள் குளமானது : கமல்ஹாசன் ட்வீட்!

சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் போட்டியில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ஜெய் பீம். இருளர் சமூகத்தினர் அனுபவிக்கும் கொடுமைகளை  28 வருடத்திற்கு முன்னால் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் சாதி ரீதியாக மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை பார்த்த முதல்வர் ஸ்டாலின் படத்தையும் படக்குழுவினரையும் மனதார பாராட்டியிருந்தார்.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனும் ஜெய் பீம் திரைப்படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்த பிறகு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், #JaiBhim பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் என்று பதிவிட்டுள்ளார்.


Tags : Jai Beam ,Kamallhassan , நடிகர் சூர்யா
× RELATED உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரையை...