ஆபாச பட வழக்கில் ஜாமீனில் உள்ள ஷில்பா ஷெட்டி கணவர் திடீர் முடிவு: சமூக ஊடகத்தில் இருந்து வெளியேறினார்

மும்பை: ஆபாச பட வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே உள்ள ஷில்பா ஷெட்டி கணவர் திடீரென தனது சமூக ஊடக கணக்கில் இருந்து வெளியேறினார். பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆபாசப் படம் தயாரித்து வெளியிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து இவ்விவகாரம் தொடர்பாக மேலும் 11 பேரை போலீசார் கைது செய்தனர். தற்போது ராஜ் குந்த்ரா நீதிமன்ற ஜாமீனில் உள்ளார்.

இந்நிலையில், ராஜ்குந்ரா தனது இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகளில் இருந்து வெளியேறிவிட்டார். இது, அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி ஆகியோர், நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு எதிராக ரூ.50 கோடி கேட்டு அவதூறு புகாரை அளித்தனர். இதற்கு பதிலளித்த ஷெர்லின் சோப்ரா, ‘ராஜ் குந்த்ரா - ஷில்பா ஷெட்டி தம்பதியர் எனக்கு மன ரீதியான துன்புறுத்தல் கொடுத்துள்ளதால் அவர்களுக்கு எதிராக ரூ.75 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளேன். நிழல்உலக பிரபலங்களான அவர்கள், என்னை பலவகையிலும் அச்சுறுத்தினார். ஆனால் நான் அவர்களுக்கு பயப்பட மாட்டேன்’ என்றார்.

Related Stories: