100 நாள் வேலை திட்ட நிலுவைத் தொகை ரூ.1,178 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்: டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

டெல்லி: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் டி.ஆர்.பாலு எம்.பி.சந்தித்து பேசினார். அப்போது 100 நாள் வேலை திட்டம் தொடர்பாக தமிழ்நாட்டுக்கான ரூ.1178 கோடியை விடுவிக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு வழங்கினார். பின்னர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு நவ.1 நிலவரப்படி ரூ.1,178 கோடி ஊதியம் தரப்படாமல் உள்ளது. உடனடியாக விடுவிக்க பிரதமர் மோடிக்கு நேற்று முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

100 நாள் வேலை திட்ட நிலுவைத் தொகை ரூ.1,178 கோடியை தமிழ்நாட்டுக்கு உடனே விடுவிக்க வேண்டும். இன்று அல்லது நாளை காலைக்குள் நிறுவைத் தொகை வழங்க வலியுறுத்தி உள்ளேன். பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என நிதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக நிதியமைச்சர் உறுதி அளித்துள்ளார் இவ்வாறு கூறினார்.

Related Stories: