திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இன்றும் நாளையும், தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குமரி கடல் பகுதி, கேரள கடலோரம், தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். சென்னை, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டையில் கனமழை பெய்யும். டெல்டா மாவட்டங்கள், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Related Stories: