×

தீபாவளியையொட்டி ஆண்டிபட்டி சந்தையில் வெள்ளாடுகளுக்கு செம ‘டிமாண்ட்’ - 15 கிலோ ஆடு ரூ.10 ஆயிரம் வரை விற்பனை

ஆண்டிபட்டி: தீபாவளியை முன்னிட்டு, ஆண்டிபட்டி சந்தையில் வெள்ளாடுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. இதனால், 15 கிலோ கொண்ட ஆடு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையானது. ஆண்டிபட்டி நகரில் வாரந்தோறும் திங்கள்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு ஆண்டிப்பட்டி, சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் நேரில் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர். சந்தையில் குரும்பாடு, வெள்ளாடு, செம்மறி ஆடுகள் விற்பனை செய்யப்படுகிறது.

கிராமப்புறங்களில் பசுந்தீவனங்களை உணவாக உட்கொண்டு வளரும் வெள்ளாடுகளை வாங்க ஆண்டிப்பட்டி சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர். அதிலும் தற்போது தீபாவளி பண்டிகை வரும் நிலையில், வெள்ளாடுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இயற்கையான முறையில் வளர்க்கப்படும் வெள்ளாடுகளின் இறைச்சி அதிக ருசி கொண்டதாக இருப்பதால் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த இறைச்சி கடைக்காரர்கள் தரமான வெள்ளாடுகளை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதன்காரணமாக ஆண்டிபட்டி ஆட்டுச்சந்தையில் வெள்ளாடுகளின் விலை உயர்ந்து காணப்பட்டது. ஆண்டிபட்டி ஆட்டுசந்தையில் 15 கிலோ எடை கொண்ட வெள்ளாடுகள் ரூ.9 ஆயிரம் முதல் 10 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டை விட வெள்ளாடுகள் விலை அதிகரித்து காணப்பட்டாலும், சில்லறை இறைச்சி விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்போவதில்லை என்று இறைச்சி விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.


Tags : Sema ,Diwalyotti Antibati Market , Goats 'demand' for goats at Andipatti market for Diwali - 15 kg goat for sale up to Rs.10,000
× RELATED பாஜ கட்சி யூடியூபில்தான் இருக்கிறது:...