×

மாதவரத்தில் 200 படுக்கை வசதியுடன் பிரசாந்த் பன்னோக்கு மருத்துவமனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

சென்னை: வடசென்னை பகுதி மக்களுக்கு உலகத்தர மருத்துவ சேவைகளை வழங்கும் வகையில், மாதவரம் மேம்பாலம் அருகே ஜவஹர்லால் நேரு சாலையில், பிரசாந்த் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. 1 லட்சத்து 30 ஆயிரம் சதுர அடியில் 200 படுக்கை வசதிகளுடன், 9 தளங்கள் கொண்ட இந்த மருத்துவமனையில் இதய நோய், இரைப்பை, குடல், சிறுநீரகவியல், நரம்பியல், மகப்பேறு மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவம் உள்ளிட்ட அனைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவசர சிகிச்சை படுக்கை வசதிகள், 7 அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் விபத்து சிகிச்சைக்கான படுக்கை வசதிகளும் அதிநவீன பை-பிளேன் கேத்லேப் உள்ளிட்ட பல உயர்தர வசதிகளும், சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் உடன் கூடிய உயர்நிலை கதிரியக்கவியல் பிரிவு, பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு, நிலை 4, இரைப்பை- குடல் அறிவியல் மையம் ஆகியவைகளை கொண்ட பன்னோக்கு மருத்துவமனையாக கட்டமைக்கப்பட்டது.  மேலும், கல்லீரல் மாற்று சிகிச்சை அறிவையும் இங்கு துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையின் திறப்பு விழா, நிறுவன தலைவர் டாக்டர் கீதா ஹரிப்ரியா தலைமையில் நடந்தது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், வட கிழக்கு திமுக மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, கலாநிதி வீராசாமி எம்பி மற்றும் டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Prasanth Multipurpose Hospital ,Madhavaram ,Minister ,Ma Subramanian , Prasanth Multipurpose Hospital with 200 beds in Madhavaram: Minister Ma Subramanian inaugurated
× RELATED மாதவரம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு...