×

தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை: தீபாவளியை முன்னிட்டு இன்றும், நாளையும் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தீபாவளியை முன்னிட்டு, வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று (2.11.2021) மற்றும் நாளை (3.11.2021) நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகின்றன. நெரிசல்மிகு நேரங்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் இன்று (2.11.2021) மற்றும் நாளை (3.11.2021) மட்டும் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று மற்றும் நாளை இரவு 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Diwali , Metro rail service extended ahead of Diwali
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...