கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர் கூட்டம்  ஒன்றிய குழு தலைவர் சிவகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன், நடராஜன் முன்னிலை வகித்தனர்.  இதை  திமுக கவுன்சிலர்கள் 9 பேர், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியில் தல ஒரு கவுன்சிலர் வீதம் புறக்கணித்தனர்.  இதில் ஒன்றியக் குழு தலைவர் சிவகுமார், அதிமுக கவுன்சிலர்கள் ரோஜா ரமேஷ்குமார், ஆரோக்கியமேரி, தேவி சங்கர், நாகராஜ், பாமக கவுன்சிலர்கள் மணிமேகலை கேசவன், சங்கர், சுயேச்சை கவுன்சிலர்கள் உஷாரவி, சீனிவாசன் ஆகிய 9 கவுன்சிலர்களே கூட்டத்தில் பங்கேற்றனர்.

கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழுவில் ஒன்றிய குழு தலைவர், துணைத்தலைவர்  உள்ளிட்ட 26 பேர் உறுப்பினர்களாக உள்ள நிலையில் கூட்டத்தில் 9 பேர் பங்கேற்று, ஒன்றிய குழு துணை தலைவர் உள்ளிட்ட 9 திமுகவினர் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். மேலும் 6 உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை.   கவுன்சிலர் கூட்டம் 2 மணி நேரம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கவுன்சிலர் தங்கள் பகுதிக்கு தேவையான தார் சாலை,  சுண்ணாம்புகுளம் பகுதியில் கால்நடை மருத்துவமனை வேண்டிகோரிக்கைகளை முன்வைத்து பேசினர். இதற்கு ஒன்றிய குழு தலைவர் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், நட்ராஜ் ஆகியோர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். திமுக ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரபோவதாக தெரிவித்தனர்.

Related Stories: