×

பாமகவினர் சாலை மறியல்

திருவள்ளூர்: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி 25க்கும் மேற்பட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியது தவறு எனக்கூறி வன்னியர்களுக்கு வழங்கிய 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக அதிரடி தீர்ப்பை அறிவித்தது.

இந்நிலையில், இதனை கண்டித்து திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் சந்திப்பு பகுதியில் பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் பாலயோகி தலைமையில் பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் மாநில இளைஞரணி துணை செயலாளர் தினேஷ்குமார், மாவட்ட செயலாளர் பூபதி, ஒன்றிய செயலாளர் விஜயராகவன், விஜயகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் பாபு, சந்திரன், திருவேங்கடம், ஜெய்சங்கர், ரவி, தண்டபாணி, வினோத் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.



Tags : Bamagavinar Road Stir , Bamagavinar Road Stir
× RELATED தென் மேற்கு பருவ மழை தீவிரம்.....