×

கொச்சியில் கார் கவிழ்ந்து 2 மாடல் அழகிகள் பலி

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்தவர் அன்சி கபீர்(25). கடந்த 2019ம் ஆண்டு நடந்த கேரள மாடல் அழகி போட்டியில் பங்கேற்று பட்டம் வென்றார். இதே போட்டியில் 2ம் இடத்தை பெற்றவர் அஞ்சனா சாஜன் (26). ஆயுர்வேத மருத்துவர். நேற்று முன்தினம் இரவு அன்சி கபீர், அஞ்சனா சாஜன் மற்றும் முகமது ஆசிக், அப்துல் ரகுமான் ஆகியோர் கொச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்து காரில் திருவனந்தபுரம் புறப்பட்டனர். காரை முகமது ஆசிக் ஓட்டினார். நேற்று அதிகாலை சுமார் 1 மணி அளவில் கார் எர்ணாகுளம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் முன்னால் சென்ற பைக் மீது கார் மோதியது. அப்போது கார் நிலைதடுமாறி தலைகீழாக கவிழ்ந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் கார் உருக்குலைந்தது. காரில் இருந்த அழகிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

Tags : Car overturns in Kochi 2 model beauties killed
× RELATED வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில்...