×

நிதித்துறையில் புது நடைமுறை: பழனிவேல் தியாகராஜன் பேட்டி

சென்னை: தலைமை செயலகத்தில் இன்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அரசிடம் உள்ள தகவல்களை ஒன்றிணைத்ததன் மூலம் பயிர்கடனில் உள்ள குளறுபடிகள் எல்லாம் தெரியவந்தது. நகைக்கடன் தள்ளுபடியில் பல தகவல்கள் பெறப்பட்டு தவறான முறையில் கடன் பெற்றவர்களுக்கு செல்லவேண்டிய பணம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மறைந்தவர்கள் பெயரில் ஓய்வூதியம் இன்னும் சென்றுகொண்டே இருக்கிறது. இந்த ஆண்டில் இருந்து முதல்வரின் உத்தரவை பெற்று நிதித்துறையில் ஒரு புது நடைமுறையை கொண்டுவர இருக்கிறோம்.

ஒரு காரணத்திற்காக பணத்தை மாற்ற வேண்டும் என்றால் நிதித்துறையின் ஒப்புதல் இல்லாமல் மாற்ற முடியாது என்ற விதிமுறையை கொண்டுவர இருக்கிறோம். இதன் மூலம், வாரியமோ அல்லது துறையோ அரசிடம் இருந்து பணம் பெறும் போது அது எங்கள் பார்வையிலேயே தெளிவாக இருக்கும்.


Tags : Palaniel Diyakarajan , New practice in finance: Palanivel Thiagarajan interview
× RELATED மாநில அரசின் உரிமையை ஒன்றிய அரசு தட்டி...