தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1400 ஆம்னி பேருந்துகள் இயக்கம்

சென்னை: ஆம்னி பேருந்துகள் தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் 1400 பேருந்துகள் இயக்கப்படுகின்றன என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் அ.அன்பழகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஆம்னி பேருந்துகள் தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் 1400 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னையிலிருந்து மட்டும் 500 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

திருச்சி மற்றும் மதுரை காரைக்குடி திருநெல்வேலி மார்க்கமாக இயங்கும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து வானகரம்-நசரத்பேட்டை-பூந்தமல்லி வெளிவட்ட சாலை-கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வழியாக இயக்கப்படும் ஆகையால் பயணிகள் கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வந்து பயணம் மேற் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: