×

பண மோசடி புகார்: அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நவ.10ம் தேதிக்கு ஒத்திவைப்பு

நாமக்கல்: அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் சத்துணவுத்துறை அமைச்சராக இருந்த சரோஜா, கணவர் லோகரஞ்சனோடு சேர்ந்து சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி ஊழியர் என பல பணிகளுக்கு சுமார் 76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வசூல் செய்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சரோஜாவின் முன்னாள் உதவியாளரும், உறவினருமான குணசீலன், ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் கூறப்பட்ட 15 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்தியதில் மோசடி நடந்ததற்கான முகாந்திரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், புலன் விசாரணை நடத்தி சரோஜா, அவரது கணவர் லோகரஞ்சன் மீது கடந்த 26ம் தேதி 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இருவரும் தலைமறைவான நிலையில், கடந்த 29ம் தேதி முன்ஜாமீன் கோரி நாமக்கல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஞானசேகரன் முன்பு விசாரணைக்கு வந்த போது சாட்சிகளை கலைக்க கூடும் என்பதால் சரோஜாவுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை வருகின்ற 10ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


Tags : Ex ,Minister ,Saroja , Saroja, pre-bail, Nov.10
× RELATED ஓட்டேரியில் வீதி வீதியாக சென்று...