×

ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ம.பி, சத்தீஸ்கர், ஹரியானா மாநிலங்கள் உருவான நாள் : பிரதமர் மோடி 6 மொழிகளில் வாழ்த்து

டெல்லி: மொழிவாரியாக ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ம.பி., சத்தீஸ்கர் மற்றும் ஹரியானா மாநிலங்கள் உருவான தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு மெட்ராஸ் மாகாணம் இன்றைய தமிழ்நாடு மற்றும் கேரள, ஆந்திர, கர்நாடகா, ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கி இருந்தது. சுதந்திரம் அடைந்த பிறகு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றது. அதுகுறித்து ஆய்வு செய்ய மாநில எல்லைகள் மறு சீரமைப்பு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒரிசா மாநில பகுதிகள் மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்டன. இதேபோல் 1956 நவம்பர் 1-ல் மத்திய பாரத், விந்திய பிரதேசம், போபால் சமஸ்தானங்களை உள்ளடக்கிய பகுதிகளை இணைத்து மத்திய பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்டது. இந்த மத்திய பிரதேசத்தில் இருந்து 2000-ம் ஆண்டு நவம்பர் 1-ல் சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது. 1966-ம் ஆண்டு கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்டு ஹரியானா மாநிலம் உருவாக்கப்பட்டது.

இம்மாநிலங்கள் அனைத்தும் நவம்பர் 1-ந் தேதியை மாநிலங்கள் உருவான நாளாக அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றன. இதனையொட்டி இந்த 6 மாநில மக்களுக்கும் பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் , தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 6 மாநில மொழிகளில் அம்மாநில மக்களுக்கு மாநிலங்கள் உருவான நாளுக்கான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

*ஆந்திரப் பிரதேச மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு, அந்த மாநில மக்களுக்கு

“ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு மாநில நிறுவன தின வாழ்த்துக்கள். ஆந்திர பிரதேச மக்கள் தங்கள் திறமை, உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சிக்கு பெயர் பெற்றவர்கள். அதனால்தான் அவர்கள் பல துறைகளில் வெற்றி பெறுகின்றனர். ஆந்திர பிரதேச மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், வெற்றிகரமாகவும் இருக்கட்டும்”, இவ்வாறு பிரதமர் தனது டுவிட்டர் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

*கேரள மாநிலத்தின் நிறுவன தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அந்த மாநில மக்களுக்கு
கேரள மக்களுக்கு மாநில நிறுவன தின வாழ்த்துகள். கேரளா அதன் அழகிய சுற்றுப்புறங்கள் மற்றும் அதன் மக்களின் உழைப்புத் தன்மைக்காக பரவலாகப் போற்றப்படும் மாநிலம். கேரள மக்கள் தங்களின் பல்வேறு முயற்சிகளில் வெற்றி பெறட்டும்.”, இவ்வாறு பிரதமர் தனது டுவிட்டர் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

*கர்நாடக மாநில தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அந்த மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கர்நாடக தினமான இந்த சிறப்பு தினத்தில் வாழ்த்துகள். புதுமையான கண்டுபிடிப்புகளில் வைராக்கியம் கொண்ட மக்களால் கர்நாடகா தனி முத்திரையைப் பதித்துள்ளது. சிறந்த ஆராய்ச்சி மற்றும் தொழில் நிறுவனங்களில் இம்மாநிலம் முன்னணியில் உள்ளது. வரும் காலங்களில் கர்நாடகா வெற்றியின் புதிய உச்சங்களை எட்டட்டும்” இவ்வாறு பிரதமர் தனது டுவிட்டர் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

*சட்டீஸ்கர்மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு, அந்த மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பது:

மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு சட்டீஸ்கர் மக்கள் அனைவருக்கும் இதயப்பூர்வ வாழ்த்துகள். நாட்டுப்புற பாடல், நாட்டுப்புற நடனம் மற்றும் கலை- கலாச்சாரத்தில் தனித்துவ அடையாளத்துடன் திகழும் இம்மாநிலம் வளர்ச்சியில் புதிய குறியீட்டை எட்ட நான் வாழ்த்துகிறேன். என்று தெரிவித்துள்ளார்.

*மத்திய பிரதேச மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு, அந்த மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பது

“மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு மத்திய பிரதேச மக்களுக்கு இதய பூர்வ வாழ்த்துகள். இயற்கை வளங்கள் மற்றும் கலை- கலாச்சார செழுமை மிகுந்த இம்மாநிலம், தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் செல்ல நான் வாழ்த்துகிறேன். மாநில நிறுவன தினத்தில் ஹரியானா மக்களுக்கு வாழ்த்துகள். பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் இம்மாநிலம், வளர்ச்சியில் புதிய தரத்தை உருவாக்க நான் வாழ்த்துகிறேன்.”என்று தெரிவித்துள்ளார்.

*ஹரியானா மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு, அந்த மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பது:

மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு ஹரியானா மக்களுக்கு வாழ்த்துக்கள். பாரம்பரியம், கலாச்சார பெருமைகளை கட்டிக் காக்கும் இம்மாநிலம், தொடர்ந்து வளர்ச்சியில் புதிய தரத்தை உருவாக்க வாழ்த்துகள்என்று தெரிவித்துள்ளார்.


Tags : Andhra ,Kerala ,Karnataka ,Ma ,The Day of the Formation of P ,Chattieskar ,Haryana ,Modi , பிரதமர் மோடி
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள்...