தவறான தகவல் கொடுத்து நகைக்கடன் பெற்றவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி நிறுத்திவைப்பு: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: தவறான தகவல் கொடுத்து நகைக்கடன் பெற்றவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடியை நிறுத்தி வைத்ததில் பெரும் பலன் கிடைத்துள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டியளித்துள்ளார். நகைக்கடன் தள்ளுபடி குறித்து குழு அமைத்து தவறாக நிதி பயன்படுத்தப்பட்டதை எவ்வாறு திருப்பி பெறலாம் என்பதை ஒருபுறம் அரசாங்க துறைகளில் இருந்தும் மற்றொரு புறம் வங்கிகளில் இருந்தும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளது. இந்த தகவல்களின் படி இதுவரை செலவு பண்ணப்படாத, செலவுபண்ண வாய்ப்பில்லாத நிதிகள் எல்லாம் திரட்டப்பட்டு, அரசு செலவு பண்ண அதிகாரமில்லாத நிதிகள் திரும்ப பெற வேண்டும் என்ற சூழ்நிலையை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதில் முதல் கட்டமாக இன்று சுமார் 2,000 கோடி ரூபாய் ஏற்கனவே கணக்கில் செலுவுபண்ணப்பட்டதாக இருந்தது திருப்பி வரக்கூடிய சூழ்நிலையில் இருந்து திரும்ப வந்துகொண்டுள்ளது. இதில் மேலும் பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்க துறைகளில் இருந்து வரும் தகவல்களுக்கும், வங்கிகளில் இருந்து வரும் தகவல்களுக்கும் பெரும் வேறுபாடு உள்ளது. இதனை திருத்தினால் மேலும் பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கத்திடம் இருக்கின்ற தகவல்களை திரட்டி ஒன்றிணைத்து, முரண்பாடு குறித்து ஆராய்ந்ததில் புதிய திட்டங்களை செயல்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. பயிர்க்கடன் தள்ளுபடியில் இருந்த குளறுபடிகள் நிறைய தெரியவந்தது. ஏற்கனவே ஒத்திவைக்கப்படாத கடன்களை சீர்திருத்தி தகுதி இல்லாத கடன்களை கண்டறிந்து பிரித்ததால் அரசிற்கு பெரும் சேமிப்பு வந்தது.

நகைக்கடன் தள்ளுபடி குறித்த ஆய்வில் பல தகவல்கள் தெரிய வந்து அதனால் கணிசமான தொகை, தவறான தகவல் வைத்து கடன் பெற்றவர்களுக்கு, அதனை இழப்பாக அரசு ஏற்றுக்கொள்ளாமல், அதனை நிறுத்தி வைத்ததும் அரசிற்கு பெரும் பலன் அளித்துள்ளது. பிறப்பு, இறப்பு, திருமண பதிவேடுகள் வைத்து ஆராய்ந்ததில் பலர் மறைந்தவர்கள் பெயரில் இன்றும் ஓய்வூதிய நிதி சென்றுகொண்டுள்ளது. இறந்தவர்கள் பலரின் பெயரில் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவல்கள் இதற்கு முன்னர் அரசிடம் இல்லை.

தவறான இடங்களில் நிதியை வீணாக செலவு பண்ணக்கூடாது, பொருளாதார நியாயத்திற்கு ஏற்ப தவறியவர்களுக்கு பணம் போக கூடாது, அரிசி போக கூடாது. இந்த சேமிப்பை அரசாங்கத்தின் வேறு செலவுகளுக்கு எடுக்காமல் இன்னும் தகுதியானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு செலுத்த உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

உலக பொருளாதார ஆலோசகர்கள் கொடுத்த ஆலோசனையின் படி முதியோர் ஓய்வூதியத்தை உடனடியாக 10% அதிகரிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தகுதியுள்ளவர்கள் இன்று ஓய்வூதியம் பெறாமல் உள்ளனர் என்று தகவல் வருவதாக முதல்வர் கொடுத்த அறிவுறுத்தலின் பேரில் முதியோர் ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளை நிறுத்துவதால் மொத்த செலவு குறையும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்து வருகிறார்.

Related Stories: