டிரான்சில்வேனியா ஓபன் பைனலில் ஹாலெப்புடன் கோன்டவெய்ட் மோதல்

குளூஜ் நபோகா: ருமேனியாவில் நடைபெறும் டிரான்சில்வேனியா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உள்ளூர் நட்சத்திரம் சிமோனா ஹாலெப்புடன் எஸ்டோனியாவின் அனெட் கோன்டவெய்ட் மோதுகிறார். அரையிறுதியில் உக்ரைன் வீராங்கனை மார்தா கோஸ்ட்யுக்குடன் மோதிய ஹாலெப் அதிரடியாக விளையாடி 6-0, 6-1 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்றார்.

இப்போட்டி 1 மணி, 2 நிமிடத்திலேயே  முடிவுக்கு வந்தது. மற்றொரு அரையிறுதியில் ஸ்வீடனின் ரெபெக்கா பீட்டர்சனுடன் மோதிய அனெட் கோன்டவெய்ட் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் பைனலில் ஹாலெப் - கோன்டவெய்ட் மோதுகின்றனர்.

Related Stories:

More