×

நடிகை ஊர்மிளாவுக்கு கொரோனா

மும்பை: இந்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்தவர், ஊர்மிளா மடோன்கர். சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். டி.வி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். மலையாளத்தில் கமல்ஹாசனுடன் ‘சாணக்யன்’, தமிழில் ‘இந்தியன்’ ஆகிய படங்களில் நடித்துள்ள ஊர்மிளா, ராம் கோபால் வர்மா இயக்கிய ‘ரங்கீலா’ என்ற படத்தின் மூலம் புகழ்பெற்றார். இந்நிலையில், சில நாட்கள் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்ட அவர், நேற்று மருத்துவமனை சென்று பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து ஊர்மிளா மடோன்கர் நேற்று வெளியிட்ட பதிவில், ‘மருத்துவ பரிசோதனையில் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வீட்டில் என்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். கடந்த சில நாட்களாக என்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். தீபாவளி நெருங்கிவிட்டது. அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து, அரசாங்க விதிகளைப் பின்பற்றி ெகாரோனா வராமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். 


Tags : Urmila , Actress, Urmila, Corona
× RELATED அவன் தம்பி